நேதாஜியின் உறவினர் காலமானார்.. பிரதமர், ஜனாதிபதி இரங்கல்.!

நேதாஜியின் உறவினர் காலமானார்.. பிரதமர், ஜனாதிபதி இரங்கல்.!

Update: 2021-01-08 16:25 GMT

இந்திய விடுதலைக்காக பெரும் பங்காற்றியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆவார். அவரது மருமகள் சித்ராகோஷ் இன்று கொல்கத்தாவில் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சித்ரா கோஷின் மறைவுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளதாவது: பேராசிரியர் சித்ரா கோஷ் கல்வியாளர்கள் மற்றும் சமூக சேவைக்கு முன்னோடியாக செயல்பட்டார். நேதாஜி தொடர்பான ஆவணங்களை வகைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை நாங்கள் விவாதித்தபோது அவருடனான எனது தொடர்பை நான் நினைவு கூர்கிறேன். அவரது மறைவு வருத்தமாக உள்ளது. ஓம் சாந்தி என தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்: நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் மரியாதைக்குரிய அறிஞரும் மருமகளுமான பேராசிரியர் சித்ரா கோஷ், கல்வியாளர்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார் மற்றும் சமூக பணி மற்றும் மனித உரிமைகள், குறிப்பாக பெண்கள் அதிகாரம் ஆகிய துறைகளில் பங்களித்தார் என தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Similar News