"புதிய வகை கொரோனா தொற்று" மக்கள் முகக்கவசம் அணிந்து கவனமுடன் இருக்க வேண்டும்: பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

புதிய வகையிலான மிகவும் வீரியமிக்க கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2021-11-27 10:22 GMT

புதிய வகையிலான மிகவும் வீரியமிக்க கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் அறிவுறுத்தியுள்ளார். சீனாவில் உருவாகிய கொரோனா பெருந்தொற்று உலகத்தையே கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசியை கண்டுப்பிடித்து வெற்றிகரமாக பொதுமக்களுக்கு செலுத்தி வருகிறது. இந்தியாவில் இருந்து கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் உலகளவில் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

இந்தியாவில் இதுவரை 100 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் தினமும் பல லட்சம் மக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி செலுத்தும் பணியை பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று (நவம்பர் 27) வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில்: புதிய வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவி வருவதால் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிக கொரோனா தொற்று பரவல் ஏற்படும் இடங்களை கட்டுப்படுத்த பகுதியாக தொடர வேண்டும். தீவிர கட்டுப்பாடு, கண்காணிப்பு தொடர வேண்டும். முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை சரியாக கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Source: Dinakaran

Image Courtesy:Mint


Tags:    

Similar News