மோடியின் வாக்குறுதி என்று பெயரில் சத்தீஸ்கரில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு வாக்குறுதிகளை வெளியிட்டார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
மொத்தம் 90 தொகுதிகளை பெற்றுள்ள சத்தீஸ்கரில் வருகின்ற நவம்பர் 7 மற்றும் 17ஆம் தேதிகளில் சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக சார்பில் வாக்குறுதிகள் மோடியின் வாக்குறுதிகள் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது அந்த வாக்குறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ள சில முக்கிய வாக்குறுதிகள்: ஆண்டிற்கு ரூபாய் 12000 குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும், ராம் லல்லா யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு அதன் மூலம் ஏழை மக்கள் ராம ஜென்ம பூமிக்கு பயணம் செய்ய உதவிக்கரம் நீட்டப்படும், நெல் குவிண்டாலுக்கு ரூபாய் 3100 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும், ஆண்டுதோறும் நிலமில்லாமல் உள்ள விவசாய தொழிலாளர்களுக்கு ரூபாய் பத்தாயிரம் உதவித்தொகை வழங்கப்படும், ஏழைக் குடும்பங்களுக்காக சமையல் கேஸ் சிலிண்டர் ரூபாய் 500 க்கு கொடுக்கப்படும் மற்றும் ஒரு லட்சம் அரசு காலி பணியிடங்கள் ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் நிரப்பப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் சத்தீஸ்கரில் கிட்டத்தட்ட 18 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் மாதாந்திர பயணப்படி தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Source : Dinamalar