கர்நாடகாவில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல்.!
கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று தினசரி பாதிப்பாக 15 ஆயிரத்தை கடந்து செல்கிறது.
கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று தினசரி பாதிப்பாக 15 ஆயிரத்தை கடந்து செல்கிறது. இதனை கட்டுப்படுத்த நேற்று அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு கொரோனா தொற்று காரணமாக அவர் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றார். அப்போது காங்கிரஸ் தலைவர் சிவகுமார் மற்றும் ஜேடிஎஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
அப்போது பெருகி வரும் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, கர்நாடகாவில் ஏப்ரல் 21ம் தேதி இரவு 9 மணி முதல் மே 4ம் தேதி காலை 6 மணி இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இரவு நேர ஊரடங்கில் அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் அடைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கர்நாடக மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது.