'கருப்பு பூஞ்சை உட்பட பல்வேறு மருந்துக்கு ஜி.எஸ்.டி. இல்லை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய சலுகைகளை அறிவித்தார்.!
கருப்பு பூஞ்சை சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்பி மருந்துக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இன்று 44வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதன் பின்னர் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அது மட்டுமின்ற பல்வேறு மருத்துவ பொருட்களுக்கும் புதிய சலுகைகளை நிதியமைச்சர் அறிவித்தார். அதில் சில கொரோனா தடுப்பூசிகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும். கருப்பு பூஞ்சை மருத்துக்கு ஜிஎஸ்டி இல்லை.
ரெம்டெசிவர் மருந்து மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து இருந்து 5 சதவீதமாக குறைப்பு. கொரோனா சிகிச்சைக்கு உபயோகப்படும் மருந்துக்கு ஜிஎஸ்டி இல்லை. அது மட்டுமின்றி, சானிடைசர், உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி, பல்ஸ் ஆக்சி மீட்டருக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்படுகிறது.
ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைப்பு. வென்டிலேட்டர், கொரோனா பரிசோதனைக் கருவிகளுக்கான வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைப்பு. இந்த அறிவிப்பு இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.