திடீரென எய்ம்ஸ் மருத்துவமனையில் நிர்மலா சீதாராமன் அனுமதி - என்ன நடந்தது?
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.;
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பா.ஜ.க மூத்த தலைவரும், மத்திய நிதியமைச்சர்மான நிர்மலா சீதாராமனுக்கு நேற்று காலையில் லேசான காய்ச்சல் ஏற்பட்டது அவருக்கு நடத்தப்பட்ட முதற்கட்ட பரிசோதனைகள் அவருக்கு வயிற்றில் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து நிர்மலா நேற்று மதியம் 12 மணிக்கு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் குழு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து அவரது உடல்நிலையை கண்காணித்து வருகிறது. சிகிச்சை முடிந்து ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் என எய்ம்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.