நிதிஷ்குமார் துணை ஜனாதிபதி பதவி எதிர்பார்த்தார், கிடைக்கவில்லை என்றதும் கூட்டணி மாறிவிட்டார் - பா.ஜ.க

பா.ஜ.க நிதிஷ்குமார் கூட்டணி முறிந்ததற்கு 'குடியரசு துணைத் தலைவராக விரும்பினார் நிதிஷ்குமார் அது கிடைக்கவில்லை என்பதால் விலகிக்கொண்டார்' என பா.ஜ.க தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-11 10:03 GMT

பா.ஜ.க நிதிஷ்குமார் கூட்டணி முறிந்ததற்கு 'குடியரசு துணைத் தலைவராக விரும்பினார் நிதிஷ்குமார் அது கிடைக்கவில்லை என்பதால் விலகிக்கொண்டார்' என பா.ஜ.க தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.



பீகார் மாநிலத்தில் திடீர் அரசியல் திருப்பமாக பா.ஜ.க உடனான கூட்டணி முறித்து ஐக்கிய ஜனதா தலை தலைவர் நிதீஷ் குமார் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட 7 கட்சிகள் இணைந்த புதிய கூட்டணி சார்பில் முதலமைச்சராக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில், 'நிதிஷ்குமார் குடியரசு துணைத் தலைவராக விரும்பினார்' என பா.ஜ.க மூத்த தலைவரும் பிகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில், 'நிதிஷ்குமாருக்கு குடியரசுத் துணை தலைவர் பதவியை வழங்க வேண்டும் என அவரது கட்சியை சேர்ந்த தலைவர்கள் தம்மிடம் வலியுறுத்தி வந்தனர். அவர் குடியரசுத் துணை தலைவர் ஆனால் நீங்கள் பீகார் முதலமைச்சர் ஆகலாம் என பேரம் பேசினார்கள்' என குறிப்பிட்டுள்ளார்.


பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மேற்குவங்க முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தன்கர் இந்த தேர்தலில் வேட்பாளராக தேர்வு செய்தது அவர் வெற்றி பெற்றுள்ளார்.

தற்போதைய பீகார் துணை முதலமைச்சர் தேஜாஸ்ரீ யாதவ் எதிராக ஊழல் வழக்கில் விசாரணை தொடங்கியுள்ளது. அவருக்கு எதிராக சாட்சியம் உள்ளது அதன் விளைவாக அவர் சிறைக்குச் செல்லலாம் என சுசில்குமார் மோடி குறிப்பிட்டுள்ளார்.


Source - Maalai Malar

Similar News