‘நிவர்’ புயல்.. 2 மாநில முதல்வருடன் பிரதமர் ஆலோசனை.. மத்திய அரசு சார்பில் உதவ தயார்.!

‘நிவர்’ புயல்.. 2 மாநில முதல்வருடன் பிரதமர் ஆலோசனை.. மத்திய அரசு சார்பில் உதவ தயார்.!

Update: 2020-11-24 13:13 GMT

‘நிவர்’ புயலால் பாதிப்பு தொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில முதலமைச்சர்களுடன் பேசியதாகவும், தேவைப்படும் உதவிகளை மத்திய அரசு நிச்சயமாக செய்யும் என பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.


வங்கக்கடலில் உருவாகியுள்ள, ‘நிவர்’ புயல், மாமல்லபுரத்துக்கும், புதுச்சேரிக்கும் இடையே நாளை (25ம் தேதி) கரையை கடக்க உள்ளது. இதனையடுத்து இந்த புயலை எதிர்கொள்வதற்காக தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது.


ஒருவாரத்திற்கு தேவையான உணவு பொருட்கள் இருப்பு வைக்கவும், மருந்து மாத்திரைகளை கைவசம் வைத்து கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்து, ரயில் முன்கூட்டியே  நிறுத்தப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களுக்கு இன்று மதியம் முதல் பேருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட உள்ளது.

புயல் தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ‘நிவர்’ புயல் தொடர்பான சூழ்நிலை குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியுடன் தொலைபேசியில் பேசினேன். தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என உறுதியளித்தேன். பாதிக்கப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களின் நலனுக்காக வேண்டி கொள்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Similar News