பிரதமர் மோடி பிறந்த நாளன்று வனத்தில் பாயும் எட்டு ஆப்ரிக்க சிறுத்தைகள்!

Update: 2022-09-14 01:44 GMT

பிரதமர் நரேந்திர மோடி தனது 72வது பிறந்தநாளை செப்டம்பர் 17ம் தேதி கொண்டாட உள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் சிறுத்தைகளை அறிமுகப்படுத்தும் திட்டத்தை அவர் தொடங்கி வைக்கிறார். தேசிய பூங்காவைச் சுற்றியுள்ள அனைத்து ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் செப்டம்பர் 14-20 க்குள் அரசாங்கத்தால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

8 சிறுத்தைகள் நமீபியாவில், இந்தியாவிற்கு விமானம் மூலம் கொண்டு வரப்படுகின்றன. ஆசிய வகை சிறுத்தைகள் இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், மத்திய இந்திய காடுகளிலும் அதிகமாக வாழ்ந்து வந்தன. அதிகளவு வேட்டையாடப்பட்டதால் இந்த இனம் வெகுவாக குறைந்து விட்டது.

இந்நிலையில் இந்திய வனங்களில் சிறுத்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தின் கீழ் ஆப்ரிக்க சிறுத்தைகளை இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட உள்ளது.

இதையடுத்து ஆப்ரிக்க நாடான நமீபியாவிலிருந்து 5 ஆண்,3 பெண் என எட்டு சிறுத்தைகள் இந்தியா கொண்டுவரப்பட உள்ளது. , ம.பி.யில் உள்ள தேசிய வன விலங்குகள் பூங்காவில் பராமரிக்கப்பட உள்ளது.  பிரதமர் மோடி பிறந்த நாளன்று இந்த எட்டு சிறுத்தைகளும் வனத்தில் விடப்பட உள்ளது.

Input From: Indian Express 

Similar News