நீட் தேர்வு எழுத எந்த இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்? மத்திய அமைச்சர் வெளியிட்ட தகவல்.!

நீட் தேர்வு எழுத விருப்பம் உள்ள மாணவ, மாணவிகள், இன்று மாலை 5 மணி முதல் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் விண்ணபிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-07-13 04:28 GMT

நீட் தேர்வு எழுத விருப்பம் உள்ள மாணவ, மாணவிகள், இன்று மாலை 5 மணி முதல் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் விண்ணபிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வருகின்ற செப்டம்பர் மாதம் 12ம் தேதி நடைபெறுகிறது என குறிப்பிட்டுள்ளார். 

தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் மொத்தம் 198 நகரங்களில் நீட் தேர்வு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கொரோனா தடுப்பு வழிகாட்டி விதிமுறைகளை கடைப்பிடித்து, நீட் தேர்வு நடத்தப்படும். தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என பதிவிட்டுள்ளார்.

Similar News