கேரளா ஆர்.எஸ்.எஸ். தொண்டர் படுகொலை: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகி கைது!

கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் கடந்த 15ம் தேதி தனது மனைவியுடன் இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற ஆர்.எஸ்.எஸ். தொண்டர் சஞ்சித்தை முஸ்லீம் கும்பல் வெட்டிபடுகொலை செய்தது. இதற்கு ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக கடும் கண்டனங்களை பதிவிட்டது.

Update: 2021-11-23 06:42 GMT

கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் கடந்த 15ம் தேதி தனது மனைவியுடன் இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற ஆர்.எஸ்.எஸ். தொண்டர் சஞ்சித்தை முஸ்லீம் கும்பல் வெட்டிபடுகொலை செய்தது. இதற்கு ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக கடும் கண்டனங்களை பதிவிட்டது.

கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம், எலப்புலியை சேர்ந்தவர் பிரமுக் சஞ்ஜித். இவர் ஒரு ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ஆவார். இதனிடையே கடந்த 15ம் தேதி தன்னுடைய மனைவியுடன் பாலக்காடு, திரிச்சூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த முஸ்லிம் கும்பல் சஞ்ஜித் மற்றும் அவரது மனைவியை வழிமறித்தது. இதனிடையே அவர்கள் நின்றபோது, காரில் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களை முஸ்லிம் கும்பல் பட்டப்பகலில் சஞ்ஜித்தை சரமாரியாக வெட்டிபடுகொலை செய்துவிட்டு தப்பியோடியது. மனைவி கண்முன்னே சஞ்ஜித் துடிதுடித்து இறந்து போனார். இந்த சம்பவம் கேரளா மாநிலம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பாஜக கடும் கண்டனங்களை பதிவிட்டது.

இந்நிலையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக கேரளா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் எஸ்.டி.பி.ஐ என்ற முஸ்லீம் அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேக கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர். அந்த பயங்கர குற்றவாளிகள் தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தில் பதுங்கியிருக்கலாம் என்றும் கருதப்பட்ட நிலையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதன்படி சஞ்ஜித் கொலை வழக்கில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பை சேர்ந்த முக்கிய நிர்வாகியை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பிஎப்ஐ அமைப்பை சேர்ந்தவர் சஞ்ஜித் கொலையில் நேரடியாக தொடர்பு இருப்பவர் எனவும் போலீசார் தரப்பில் கூறியுள்ளனர். மேலும், பலர் இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என்றும், அவர்கள் விரைவில் பிடிபடுவாரகள் எனவும் கேரளா போலீசார் கூறியுள்ளனர். இதுவரை பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த சுபீர், சலாம், இஷஹப் என்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Source, Image Courtesy: Daily Thanthi


Tags:    

Similar News