'ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்' - 25 லட்சம் ராணுவ வீரர்களை குஷிப்படுத்திய மோடி அரசின் அதிரடி அறிவிப்பு
'ஒரே பதவி ஒரே ஓய்வூதிய' திட்டத்தின் கீழ் இராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியத் தொகையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.;
'ஒரே பதவி ஒரே ஓய்வூதிய' திட்டத்தின் கீழ் இராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியத் தொகையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
'ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்' திட்டத்தின் கீழ் ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதிய தொகை உயர்த்தி வழங்க மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அதிரடியாக ஒப்புதல் அடைத்துள்ளது அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் 25 லட்சம் வீரர்கள் பயனடைவார்கள். 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை ஓய்வு பெற்றவர்கள் திட்டத்தில் பயன் அடைவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.