அத்துமீறிய பாகிஸ்தான் - தீபாவளி கொண்டாடிய இந்திய ராணுவம்! 8 பாகிஸ்தான் ராணுவத்தினர் பலி!

அத்துமீறிய பாகிஸ்தான் - தீபாவளி கொண்டாடிய இந்திய ராணுவம்! 8 பாகிஸ்தான் ராணுவத்தினர் பலி!

Update: 2020-11-14 09:12 GMT
தீபாவளி பண்டிகை என்பது கொண்டாட்டங்கள், புத்தாடை, வான வேடிக்கை, பட்டாசு சப்தங்கள் நிறைந்தது. நேற்று அதுபோல் நமது இந்திய ராணுவ வீரர்களும் தங்களது ஸ்டைலில் தீபாவளியை கொண்டாடினர்.

எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறி தாக்குதல் நடத்திவருகிறது. நேற்றைய தினத்தில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சாவ்ஜியன், கெரன் உள்ளிட்டப் பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர்.

ஜம்மு - காஷ்மீரில் 2 வெவ்வேறு இடங்களில் நடந்த தாக்குதலில் 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். உரி பகுதியில் நடந்த தாக்குதலில் 2 வீரர்களும், குரேஸ் பகுதியில் நடந்த தாக்குதலில் ஒரு வீரரும் வீரமரணமடைந்ததாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா, குப்வாரா மற்றும் பந்திப்போரா மாவட்டங்களில் இருந்து, பாகிஸ்தான் பதுங்கு குழிகளை இந்திய பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் குறிவைத்து தாக்கின. பாகிஸ்தானிய வெடிமருந்துகள் மற்றும் எரிபொருள் சேமிப்பு கட்டிடங்கள் மற்றும் பங்கரவாதிகளுக்கான ஏவுதளங்களும் குறி வைத்து தாக்கப்பட்டன. இது தொடர்பான வீடியோக்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. 

இந்திய ராணுவத்தினர் கொடுத்த பதிலடியில் 8 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். அதை அந்நாட்டு ராணுவமே உறுதி செய்துள்ளது.

Similar News