அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பதில் அளிக்க அரசு தயாராக இருக்கிறது: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேட்டி!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (நவம்பர் 29) தொடங்கியது. மக்களவை மற்றும் மாநிலங்களவை என்று இரண்டு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் வேண்டும் என்றே மக்கள் பிரச்சினைகளை பேசவிடாமல் தடுக்க முயற்சிகளை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளது.

Update: 2021-11-29 06:31 GMT

இந்நிலையில், இன்று காலை குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாடாளுமன்றம் வருகை புரிந்தார். அப்போது நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்த கூட்டத்தொடர் மிக முக்கியமானது. சிறப்பு வாய்ந்த கூட்டத்தொடராக இது அமைய வேண்டும் என்று நாட்டு மக்கள் அனைவரும் விரும்புகின்றனர். எனவே ஒளிமயமான எதிர்காலத்திற்கு உறுப்பினர்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவார்கள் என்றார்.

மேலும், இந்த குளிர்கால கூட்டத்தொடரின் போது அனைத்து விதமான பிரச்சினைகள் பற்றியும் விவாதம் செய்வதற்கு அரசு தயாராக இருக்கிறது. எல்லா விதமான கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறோம். அனைத்து விதமான பிரச்சினைகளையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கலாம். அனைத்து உறுப்பினர்களும் நாடாளுமன்ற மரபுகளை பின்பற்றி செயல்பட வேண்டும் என்றார்.

Source, Image Courtesy: ANI

Tags:    

Similar News