தினமும் 6,600 டன் ஆக்சிஜன் மருத்துவ பணிகளுக்காக வினியோகம்.. மத்திய அரசு.!
கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக மோசமாக பரவி வருகிறது. முதல் அலையை விட, இது தீவிரமாக பரவி வருகிறது.
நாடு முழுவதும் தினந்தோறும் 7,500 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் கிட்டத்தட்ட 6,600 டன் மாநிலங்களுக்கு மருத்துவ பணிகளுக்காக வினியோகம் செய்யப்படுகிறது என்று மத்திய அரசு கூறியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக மோசமாக பரவி வருகிறது. முதல் அலையை விட, இது தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சில மாநிலங்களில் நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் போதுமான ஆக்சிஜன் பத்தாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இது குறித்து மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண் கூறும்போது: கொரோனா நோயாளிகளை பொறுத்தவரையில் ஆக்சிஜன் என்பது, உயிர் காக்கின்ற மருந்தாகும். வைரஸ் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், ஆக்சிஜன் தேவையும் தற்போது அதிகரித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் 7,500 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
அதில், 6,600 டன் மருத்துவ பணிகளுக்காக மாநிலங்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.