விமான பயணிகளுகு காகித பயன்பாடு, நேரத்தை மிச்சப்படுத்தும் 'டிஜி யாத்ரா' - மத்திய அரசு அறிமுகப்படுத்திய அசத்தல் செயலி
விமானப் பயணிகளுக்கான 'டிஜி யாத்ரா' செயலியை மத்திய அமைச்சர் ஜோதி ராதித்ய சிந்தியா அறிமுகப்படுத்தியுள்ளார்.;
விமானப் பயணிகளுக்கான 'டிஜி யாத்ரா' செயலியை மத்திய அமைச்சர் ஜோதி ராதித்ய சிந்தியா அறிமுகப்படுத்தியுள்ளார்.
விமான பயணத்தை எளிதாக்கும் வகையில் மத்திய அரசால் 'டிஜி யாத்ரா' என்ற முக அடையாளத்தை கொண்டு பயணிகளை அனுமதிக்கும் திட்டத்தை டெல்லி விமான நிலையத்தில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அறிமுகப்படுத்தினார்.
பெங்களூரு, வாரணாசி விமான நிலையங்களை விரைவில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ள அமைச்சர். செயலியை பயன்படுத்தி ஆதர அடிப்படையிலான விபரங்களை டிஜி யாத்திரை செயலியில் பதிவேற்ற வேண்டும் என்றார்.
காகித பயன்பாட்டை குறைக்கவும் பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்தவும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக மத்திய அமைச்சர் கூறினார்.