இந்திய அரசின் சட்டமே செல்லும்.. ட்விட்டர் நிறுவனத்தின் கொள்கை அல்ல.. நாடாளுமன்ற குழு கண்டிப்பு.!

சமூக வலைதளங்கள் இந்திய அரசின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்று மத்திய அரசு கூறியிருந்தது. இதனை பேஸ்புக் மற்றும் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டது. ஆனால் ட்விட்டர் மற்றும் முரண்டு பிடித்து வருகிறது.

Update: 2021-06-19 04:55 GMT

இந்திய மண்ணில் இந்த நாட்டு சட்டமே செல்லும் என்றும் உங்கள் கொள்கை முடிவு என்றும் ட்விட்டர் நிறுவனத்திற்கு நாடாளுமன்ற குழு கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

சமூக வலைதளங்கள் இந்திய அரசின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்று மத்திய அரசு கூறியிருந்தது. இதனை பேஸ்புக் மற்றும் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டது. ஆனால் ட்விட்டர் மற்றும் முரண்டு பிடித்து வருகிறது.


 



இதனிடையே, தங்கள் கொள்கையில் உறுதிபட உள்ளதாக மத்திய அரசிடம் ட்விட்டர் நிறுவனம் மீண்டும் தெரிவித்திருந்த நிலையில், தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற குழு காட்டமாக தெரிவித்துள்ளது. இந்திய மண்ணின் சட்டத்திட்டங்களை மீறியதற்காக ஏன் ட்விட்டர் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கக்கூடாது என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான குழு கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், விதிகளை பின்பற்றாத காரணத்திற்காக ட்விட்டர் நிறுவனத்திற்கான சட்டப்பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றது.


 



இந்நிலையில், ட்விட்டர் நிறுவன அதிகாரிகள் நாடாளுமன்றக் குழுவிடம் ஆஜராகி தங்களின் விளக்கத்தை அளித்தனர். இதனையடுத்து அக்குழு மிகவும் காட்டமாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மற்ற சமூக வலைதள நிறுவனங்கள் இந்த நாட்டின் சட்டத்திட்டங்களை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், ட்விட்டர் நிறுவனம் மட்டும் முரண்டு பிடிப்பது சரியல்ல என்பது அனைத்து குடிமக்களின் கேள்வியாகவும் உள்ளது.

Similar News