4 மாநிலங்களில் இருந்து பெங்களூருக்கு வருபவர்களுக்கு மட்டுமே கொரோனா சான்று: பிற மாநில மக்களுக்கு விதிவிலக்கு.!
தமிழகம், உபட்ட பிற மாநிலங்களில் இருந்து பெங்களூர் செல்வோர் சான்றிதழை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டியதில்லை என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூரு செல்லக்கூடிய எந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
கேரளா, மகாராஷ்டிரா, சண்டிகர் மற்றும் பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டும் பெங்களூரு செல்லும்போது கட்டாயமாக கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தமிழகம், உபட்ட பிற மாநிலங்களில் இருந்து பெங்களூர் செல்வோர் சான்றிதழை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டியதில்லை என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அனைத்து மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கட்டாய சான்றிதழ் வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.