களப்பணிகளில் சிறந்து விளங்கும் நபர்களை மக்களே பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கலாம்.. பிரதமர் மோடி ட்விட்.!
ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பத்ம விருதுகள் பெறுபவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன.
களப்பணிகளில் சிறந்து விளங்கும் சாதிக்க தூண்டும் நபர்களை பத்ம விருதுகளுக்காக பொதுமக்களே பரிந்துரைக்கலாம் என்று பிரதமர் மோடி ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். இந்தியாவல் அனைத்து துறைகளிலும் சிறந்து வளக்கும் நபர்களுக்கு மத்திய அரசு பத்ம விருதுகளை வழங்கி அவர்களை கவுரவித்து வருவது வழக்கம். கடந்த 1954ம் ஆண்டு முதல் குடியரசு நாளில் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்காக ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பத்ம விருதுகள் பெறுபவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: களப்பணிகளில் சிறந்து விளங்குபவர்கள் பலர் நமது நாட்டில் உள்ளனர். ஆனால் அவர்கள் பற்றி நாம் அறிவதில்லை. உங்களுக்கு இப்படிப்பட்ட சாதிக்கத் தூண்டும் நபர்களை தெரியுமா? அப்படி தெரியவந்தால் மக்களே பத்ம விருதுகளுக்காக பரிந்துரைக்கலாம். இதற்காக https://padmaawards.gov.in என்ற இணையதளங்களில் செப்டம்பர் 15ம் தேதி வரை நீங்கள் பரிந்துரை செய்யலாம் என குறிப்பிட்டுள்ளார்.