ராமர் கோயிலை தகர்க்க பி.எஃப்.ஐ திட்டம்..!

Update: 2022-10-21 01:57 GMT

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான பிஎஃப்ஐ Module 2047என்ற பயங்கர திட்டத்தை வைத்திருப்பது தெரிய வந்தது.  ராமர் கோயிலை இடித்து பாபர் மசூதி கட்டுவது, இந்தியாவை இஸ்லாமிய நாடாக அறிவிப்பது போன்ற திட்டங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்த தகவல்களை அதிகாரிகள் நாசிக் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். மேலும், பாபுலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவைச் சேர்ந்த ஐந்து பேரை சமூக அமைதிக்கு பங்கம் உண்டாக்கியதாக கூறி மகாராஷ்ட்ரா போலீசார் கைது செய்துள்ளனர்.

அதில், பிஎஃப்ஐ-யின் மேல்கான் மாவட்டத் தலைவர் மவுலான சாஹீத் அகமது அன்சாரி, புனே மாவட்டத் துணைத் தலைஅவர் அப்துல் கய்யும் சேக், மூத்தத் தலைவர் ரசியா அகமது கான், உறுப்பினர் வாசிக் சாயிக் மற்ரும் கொல்ஹாபூரைச் சேர்ந்த செயலாளர் மவுலா நபிசாப் முல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Input From: ETV

Similar News