முதுநிலை மருத்துவப்படிப்பு நீட் தேர்வு ஒத்திவைப்பு.. மத்திய அமைச்சர் தகவல்.!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளின் தேர்வுகளையும் பல்வேறு மாநில அரசுகள் மாற்றி அமைத்துள்ளது.

Update: 2021-04-15 13:47 GMT

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளின் தேர்வுகளையும் பல்வேறு மாநில அரசுகள் மாற்றி அமைத்துள்ளது. குறிப்பாக சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெறும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வும் வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.


 



இதனிடையே முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு விரைவில் நடைபெறுவதாக இருந்தது. தற்போது கொரோனா தொற்று காரணமாக மருத்துவ மாணவர்கள் மிகுந்த கவலையில் இருந்தனர்.


 



இந்நிலையில், மருத்துவ முதுநிலை படிப்பிற்கான நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த அறிவிப்புக்கு மாணவர்கள் தரப்பு மட்டுமின்றி பெற்றோர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Similar News