உலகத்தின் மருந்தகமே இந்தியான்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பெருமிதம்.!
இந்தியாவுடனான உறவை மேலும், வலுப்படுத்த பாடுபடுவதாக அவரகள் உறுதியளித்தனர். அவர்கள் அனைவருக்கும் குடியரசுத் தலைவர் வாழ்த்து கூறினார்.
இந்தியாவுக்கான கொலம்பியா, உருகுவே, ஜமாய்க்கா, ஆர்மீனியா உள்ளிட்ட நாடுகளின் தூதர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டனர். அவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை காணொலி காட்சி மூலம் சந்தித்து உரையாற்றினர்.
இந்தியாவுடனான உறவை மேலும், வலுப்படுத்த பாடுபடுவதாக அவரகள் உறுதியளித்தனர். அவர்கள் அனைவருக்கும் குடியரசுத் தலைவர் வாழ்த்து கூறினார்.
இதனிடையே குடியரசுத் தலைவர் காணொலி வாயிலாக அவர்களிடம் பேசியதாவது: உங்களின் அனைத்து நாடுகளுடனும் இந்தியாவுக்கு நல்லுறவு கிடைக்கிறது. அமைதி மற்றும் வளமை உள்ளிட்ட பொதுவான கண்ணோட்டத்தில் இந்த உறவு மிகவும் ஆழமானது.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் சர்வதேச அளவில் ஒருங்கிணைப்பதில் இந்தியா முன்னணியில் உள்ளது. உலகத்தின் மொத்த மருந்தகமே இந்தியாதான். அனைத்து நாடுகளுக்கும் தேவையான மருந்துகளை அனுப்பி உதவியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.