கிருஷ்ணர் பிறந்த இடத்திற்கு உரிமை: அடுத்த அதிரடிக்கு தயாரான இந்து அமைப்புகள்!
உத்தர பிரதேச மாநிலம், மதுரா நகரில் கோகுலம், பிருந்தாவனம் கோவர்த்தனம் உள்ளிட்டவை ஒருங்கிணைக்கப்பட்டு கிருஷ்ண ஜென்ம பூமியாக உத்தர பிரதேச அரசு அறிவித்தது. இதற்கு இந்துக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், இங்கு கிருஷ்ணர் பிறந்த இடம் என இந்துக்கள் நம்பப்படுகிறது. ஷாகி இத்கா மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதை நிறுத்த உத்தரவிடக்கோரி மதுரா நீதிமன்றத்தில் வக்கீல்கள் மற்றும் சட்ட மாணவர்கள் குழு ஒன்று மனுத்தாக்கல் செய்துள்ளது. மேலும், கத்ரா கேசவ் தேவ் கோவிலின் 13.37 ஏக்கர் வளாகத்தில் மசூதி கட்டப்பட்டது. அங்குதான் பகவான் கிருஷ்ணர் பிறந்தார் என்று பெரும்பாலான இந்துக்கள் நம்புகின்றனர் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர். உடனடியாக கிருஷ்ணர் பிறந்த இடத்தில் கட்டப்பட்ட மசூதியை அகற்ற வேண்டும் என வெவ்வேறு இந்து அமைப்புகள் நீதிமன்றத்தில் தற்போது மனுத்தாக்கல் செய்துள்ளது.
இதற்கு மத்தியில் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதிக்குள் ஒரு சிவலிங்கம் கண்டுப்பிடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில், மதுராவில் அமைந்துள்ள ஷாஹி இத்கா மசூதி பகுதி உட்பட மதுரா மாவட்டத்தில் பாதுகாப்பை பலப்படுத்த கூடுதல் டி.ஜி.பி. ராஜீவ் கிருஷ்ணா உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த சம்பவத்தால் மதுரா நகரத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
Source, Image Courtesy: Malaimalar