தடுப்பூசி வதந்திகளை நம்ப வேண்டாம்: 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை.!

கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மோசமாக உள்ளது.

Update: 2021-04-25 06:42 GMT

பிரதமர் மோடி கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்றார். அன்று முதல் இன்று வரை மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் உரையாற்றுவதை வழக்கமாக வைத்துள்ளார்.




 


அதன்படி இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது: கொரோனா வைரஸ் தொற்று நமது பொறுமையை சோதிக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மோசமாக உள்ளது. மேலும் தடுப்பூசி பற்றிய வதந்திகளை பரப்ப வேண்டாம். தடுப்பூசி குறித்து தகுந்த நபர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.


 



வரும் காலங்களில் இலவச தடுப்பூசி திட்டம் தொடரும். கொரோனா வைரஸை விரட்டியடிப்பது இந்தியாவின் தற்போதைய முன்னுரிமை பணியாகும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Similar News