நாட்டு மக்களிடம் இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.!
இந்திய நாட்டு மக்களிடம் இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார். கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையில் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே தொற்று பரவலை கட்டுப்படுத்த அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இதனால் பல்வேறு மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து வருகிறது. மத்திய அரசு பல்வேறு உதவிகளை துரிதமாக வழங்கியது.
இந்நிலையில், தொற்று குறைந்து வரும் நிலையில், தடுப்பூசி போடுதல், ஊரடங்கு காலத்தில் மத்திய அரசின் நிதியுதவி திட்டங்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களின் படிப்பு உள்ளிட்ட சில அறிவிப்புகளையும் பிரதமர் மோடி இன்று வெளியிடலாம் என கூறப்படுகிறது.
மேலும், கொரோனா குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளிடம் பிரதமர் மோடி உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையில் இனறு மாலை 5 மணிக்கு மக்களிடம் உரையாற்றுகிறார் முக்கியமான அறிவிப்புகளையும் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.