சேவை மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளம் மோடியின் வாழ்க்கை - அமித்ஷா!

சேவை மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளமாக பிரதமர் மோடியின் வாழ்க்கை விளங்குகிறது என்று மத்திய அமைச்சர் கருத்து.

Update: 2022-09-20 02:02 GMT

உலகத் தலைவராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சேவை மற்றும் அர்ப்பணிப்பின் மறுபடிவமாக திகழ்கிறார் என்று பிரதமரின் பிறந்த நாள் அன்று மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் கூறியிருக்கிறார். இந்தியா முதலில் என்ற அணுகுமுறை மக்களின் நல்வாழ்வுக்காக உழைக்க வேண்டும் என்ற துடிப்பு ஆகியவற்றின் காரணமாக உலகத் தலைவர்களில் ஒருவராக பிரதமர் மோடி அவர்கள் விளங்குகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


முடிக்க முடியாத பணிகளை கூட நம்மால் முடிக்க முடியும் என்ற உத்வேகத்தை அரசுக்கு கொடுத்து அனைத்தையும் திறம்பட செய்து இருக்கிறார். தேச பாதுகாப்பு நாட்டு மக்களை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று சமுதாயத்தில் அனைத்து தரப்பு மக்களும் மோடியின் பக்கம் நிற்கிறார்கள்.


காரணம் மக்களுக்கு செய்யும் திட்டங்களை வெளிப்படையாக அவர்களுக்கு காட்டுவதன் மூலமாக மக்கள் மற்றும் அரசாங்கத்தின் இணக்கம் மிகச் சிறந்த வகையில் இருக்கும் என்பதை உணர்ந்து டிஜிட்டல் இந்தியாவை தலைநகடத்தில் செல்வது வழிநடத்து செல்வதில் மோடி அவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. இன்றைய புது இந்தியா உலகின் முக்கிய சக்தியாக மாறி இருக்கின்றது என்றால் அத்தகைய தலைவர் இல்லாமல் அது சாத்தியமாகி இருக்காது அல்லவா?

Input & Image courtesy:Malaimalar

Tags:    

Similar News