யாஸ் புயல் பாதிப்பு குறித்து ஒடிசா முதலமைச்சருடன் பிரதமர் மோடி ஆலோசனை.!
ஒடிசாவில் ஏற்பட்ட யாஸ் புயல் பாதிப்பு நிலைமை குறித்து முதலமைச்சர் நவீன் பட்நாயக்குடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
ஒடிசாவில் ஏற்பட்ட யாஸ் புயல் பாதிப்பு நிலைமை குறித்து முதலமைச்சர் நவீன் பட்நாயக்குடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இந்தியாவில் ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களை யாஸ் புயல் கடுமையாக தாக்கியது. இதனையடுத்து இன்று பிரதமர் மோடி புயல் சேதம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். இதனை தொடர்ந்து ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை நேரில் சந்தித்து புயல் சேதம் விவரங்களை கேட்டறிந்தார்.
இதன் பின்னர் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நவீன் பட்நாயக் மற்றும் உயர் அதிகாரிகளுடன் புயல் பாதிப்பு மற்றும் சேதம் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என அவர் உறுதியளித்தார்.