கொரோனா காலத்தில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளும் போரின் கள தளபதிகள்: பிரதமர் மோடி பாராட்டு.!

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியதாவது: இக்கட்டான சூழலில் அதிகாரிகள் தங்களின் பணிகளை திறம்பட செய்து வருகின்றனர்.

Update: 2021-05-18 10:04 GMT

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியதாவது: இக்கட்டான சூழலில் அதிகாரிகள் தங்களின் பணிகளை திறம்பட செய்து வருகின்றனர்.

கொரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய பங்காற்றி வரும் நீங்கள் அனைவரும் இந்த போரின் களதளபதிகள் எனக் கூறினார். மேலும், அவர் பேசும்போது: கொரோனா 2வது அலையில் நாம் ஊரகப் பகுதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு விதமான சவால்கள் உள்ளன. கொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசிதான் மிகப்பெரிய ஆயுதம். கொரோனா தடுப்பூசி தொடர்பான அனைத்து கட்டுக்கதைகளுக்கும் எதிராக நாம் ஒவ்வொருவரும் ஒன்றிணைய வேண்டும். அனைத்து இடங்களிலும் கொரோனா தடுப்பூசி விநியோகத்தை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Similar News