கரும்பூஞ்சை நோய் சவாலாக உள்ளது: பிரதமர் மோடி.!
கொரோனா தொற்றுக்கு எதிராக நாம் போராடி வரும் நிலையில், கரும்பூஞ்சை நோய் புதிய சவாலாக அமைந்துள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசும்போது: கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்காக சேவை செய்யும் நமது முன்களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பை வழங்கியுள்ளது. வருகின்ற நாளில் அனைவருக்கும் தடுப்பூசி பாதுகாப்பை விரிவுப்படுத்துவோம்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நமது போராட்டத்தில், கரும்பூஞ்சை நோய் பெரும் சவாலாக தோன்றியுள்ளது. இதனை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் நாம் தற்போதே இறங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.