11 மாநில, மாவட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று கொரோனா குறித்து ஆலோசனை.!

கொரோனா நிலவரம் மற்றும் கட்டுப்படுத்துவது பற்றி நாடு முழுவதும் இன்று 11 மாநில, மாவட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார்.

Update: 2021-05-18 03:49 GMT

கொரோனா நிலவரம் மற்றும் கட்டுப்படுத்துவது பற்றி நாடு முழுவதும் இன்று 11 மாநில, மாவட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார்.




 


நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தினமும் 3 லட்சங்களை கடந்து தொற்று எண்ணிக்கை பதிவாகிறது.

இந்நிலையில், கொரோனா தொற்று பரவலை கையாள்வதில் மாநிலங்கள் மற்றும் மாவட்ட அளவிலான கள அனுபவங்களை அறிய, பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு கலந்துரையாடிகிறார்.


 



இன்றைய கூட்டத்தில் கர்நாடகா, பீகார், அசாம், சண்டிகர், தமிழ்நாடு, உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம், கோவா, இமாச்சலப் பிரதேசம், டெல்லி உள்ளிட்ட 11 மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News