தமிழ் பண்பாட்டின் மகத்துவம் ஒளிரட்டும்: பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்து.!

புத்தாண்டு ஒவ்வொருவரின் வாழ்விலும், ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், மகிழ்ச்சியையும், நிறைக்க, இந்த மகிழ்ச்சியான திருநாளில் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Update: 2021-04-14 02:40 GMT

இன்று தமிழ் புத்தாண்டு தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் இன்று கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.




 


இந்நிலையில், பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்; தமிழகத்து சகோதர, சகோதரிகளுக்கும், உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும். புத்தாண்டு ஒவ்வொருவரின் வாழ்விலும், ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், மகிழ்ச்சியையும், நிறைக்க, இந்த மகிழ்ச்சியான திருநாளில் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Similar News