முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து.!

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2021-05-07 09:11 GMT

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. இதனையடுத்து இன்று ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மு.க.ஸ்டாலினுக்கு முதலமைச்சராக பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து 33 அமைச்சர்களும் அவருடன் பதவியேற்றுக்கொண்டனர்.




 


இந்நிலையில், தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது பற்றி பிரதமர் மோடி ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Similar News