100 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை: நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி இன்று உரை!
பொதுமக்களுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்த இந்தியாவுக்கு உலக நாடுகள் அனைத்தும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று முதல் மற்றும் இரண்டாம் அலையில் பாதிப்பு அதிகளவு இருந்தது.
பொதுமக்களுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்த இந்தியாவுக்கு உலக நாடுகள் அனைத்தும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று முதல் மற்றும் இரண்டாம் அலையில் பாதிப்பு அதிகளவு இருந்தது. இதனை கட்டுப்படுத்த ஒரே வழி தடுப்பூசி மட்டுமே தீர்வு என விஞ்ஞானிகள் கருத்து கூறினர். இதனால் இந்திய விஞ்ஞானிகள் இரவு, பகலாக உழைத்து தடுப்பூசியை வெற்றிகரமாக கண்டுப்பிடித்து சாதனை படைத்தனர்.
இதனை தொடர்ந்து கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதலில் குறைந்த அளவில் இருந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து தற்போது குறுகிய காலத்தில் 100 கோடிக்கும் அதிகமானோர்களுக்கு தடுப்பூசி போட்டு இந்தியா சாதனை படைத்துள்ளது. இதற்கு உலக சுகாதார அமைப்பு மற்றும் பல்வேறு நாடுகள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் 100 கோடி தடுப்பூசி போடப்பட்ட நிலையில் நாட்டு மக்களிடம் பிரதமர் உரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Daily Thanthi