பிரதமரின் ஸ்வாநிதி திட்டம்: 2024 டிசம்பர் வரை நீடிக்க மத்திய அரசு உத்தரவு!

சாலை ஓர வியாபாரிகளுக்கான பிரதமரின் ஸ்வாநிதி திட்டம் 2024 டிசம்பர் மாத மத்திய அரசினால் நீடிக்கப்பட்டு இருக்கிறது.;

Update: 2022-12-10 03:07 GMT
பிரதமரின் ஸ்வாநிதி திட்டம்: 2024 டிசம்பர் வரை நீடிக்க மத்திய அரசு உத்தரவு!

சாலையோர வியாபாரி நலன்களுக்கான பிரதமரின் தற்சார்பு நிதி என்று அழைக்கப்படும் பிரதமரின் ஸ்வாநிதி திட்டத்தை வருகின்ற 2024 ஆம் ஆண்டு டிசம்பர் வரை நீடிக்கப்பட்டு இருப்பதாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத்துறை இணை அமைச்சர் கௌசல் கிஷோர் மக்களவையில் வியாழக்கிழமை அன்று தெரிவித்திருக்கிறார். இந்த திட்டம் கடந்த 2022 டிசம்பர் மாதம்  முடிவடைய இருந்தது. இந்நிலையில் இந்த திட்டத்தை மத்திய அரசு தற்போது மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்து இருக்கிறது.


இதன்படி 2024 டிசம்பர் மாதம் வரை இந்த திட்டத்தின் கீழ் கடன் வழங்கலாம் எனவும், 42 லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்து இருந்தார். மேலும் மக்கள் அவையில் எழுந்த எழுத்துப்பூர்வமான கேள்விக்கு பதில் அளித்த கௌசல் கிஷோர் மேலும் கூறுகையில், சாலையோரம் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்தல், வியாபாரிகளை ஒழுங்குபடுத்துதல் சட்டம் 2014ல் விற்பனை மண்டலங்கள் உருவாக்க அந்த மாநிலங்களின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.


இந்த திட்டத்தில் மொத்தம் 13 ஆயிரத்து 43 விற்பனை மையங்கள் அடையாளம் காணப்பட்டு கடன்கள் வழங்கப்படுகிறது. இந்த முறையாக செலுத்தியவர்களுக்கான கூடுதல் மூன்றாவது முறையாக கடன் ரூபாய் 50,000 வரை வழங்கப்படுகிறது. நிகழ்வாண்டு நவம்பர் 30ம் தேதி வரை சுமார் 31.73 லட்சம் சாலையோர வியாபாரிகள் முதலாவது கடன் தொகையை பெற்றுள்ளார். இரண்டாவது முறையை கடன் தொகையை ₹.20,000, 5.81 லட்சம் பேர் பெற்று இருக்கிறார்கள்.

Input & Image courtesy: Zee News

Tags:    

Similar News