இந்தியாவின் திறனை உலகிற்கு எடுத்துக்கூறிய விக்ராந்த் - பிரதமர் மோடி பெருமிதம்

ஐ.என்.எஸ் விக்ரம் சாதாரண போர்க்கப்பல் அல்ல ராட்சச உருவம் கொண்ட மிகவும் தனித்துவமானது என ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Update: 2022-09-02 13:36 GMT

ஐ.என்.எஸ் விக்ரம் சாதாரண போர்க்கப்பல் அல்ல ராட்சச உருவம் கொண்ட மிகவும் தனித்துவமானது என ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் மோடி பேசியுள்ளார்.



20,000 கோடி ரூபாய் செலவில் முற்றிலும் இந்தியாவில் உருவான ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை இன்று பிரதமர் மோடி நாட்டுக்கு அர்பணித்தார். அர்ப்பணித்த விழாவில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது இந்திய பாதுகாப்புத்துறையை தன்னிறைவு கொண்டதாக மாற்ற அரசுக்கு உந்து சக்தியாக விளங்கி எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் என்றார்.


மேலும் போர்க்கப்பல் குறித்து கூறிய பிரதமர் இதில் எம்.ஐ.ஜி 29 கே போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உட்பட 30 விமானங்கள் தரையிறங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. போர்க்கப்பலில் கிட்டத்தட்ட 1600 பணியாளர்கள் தங்க முடியும் என்றார்.



மேலும் பேசியவர் இந்த போர்க்கப்பல் நம்மிடையே உள்ள கடின உழைப்பையும் அறிவையும் 21 ஆம் நூற்றாண்டுக்கு உலகத்திற்கு எடுத்துக் கூறுகிறது என்றார்.



Similar News