சொத்து என எதையும் சேர்க்காமல் தன்னிடம் இருந்த ஒரு நிலத்தையும் தனமாக வழங்கிய பிரதமர் மோடி - குவியும் பாராட்டுக்கள்

பிரதமர் மோடியிடம் இருந்த ஒரு நிலத்தையும் தானமாக தற்போது வழங்கியுள்ளார், இதனால் இந்த காலத்திலும் இப்படி ஒரு அரசியல்வாதியாக மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

Update: 2022-08-11 09:45 GMT

பிரதமர் மோடியிடம் இருந்த ஒரு நிலத்தையும் தானமாக தற்போது வழங்கியுள்ளார், இதனால் இந்த காலத்திலும் இப்படி ஒரு அரசியல்வாதியாக மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் அசையும் சொத்து மதிப்பு 26.13 கோடி ரூபாய் இருந்துள்ளது. அதே நேரத்தில் அவரிடம் வீடு, நிலம் போன்ற ஆசையா சொத்து எதுவும் இல்லை தன் பேரில் இருந்த ஒரே நிலத்தை அவர் தானமாக தற்போது வழங்கியுள்ளார்.


பிரதமர் மோடி 2014ல் பிரதமராக பதவி ஏற்றது முதல் ஆண்டுதோறும் தான் சொத்து விபரங்களை வெளியிட்டு வருகிறார். அனைத்து அமைச்சர்களையும் வெளியிடம்படி கூறினார். இதன்படி கடந்த 2021-22 ஆம் நிதி ஆண்டுக்கான சொத்து பட்டியல் பிரதமர் அலுவலகத்தின் அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி பிரதமரின் சொத்து 2.23 கோடியாக உள்ளது.


இதில் குஜராத் காந்தி நகரின் உள்ள ஒரு குடியிருப்பு நிலத்தை மேலும் 3 பேருடன் சேர்ந்து 2002ல் மோடி வாங்கி இருந்தார். அதில் 25 சதவீத பங்கின் மதிப்பு 1.1 கோடி ரூபாயாகும் தற்போது தான் இந்த நிலத்தை தானமாக வழங்கி உள்ளதாக மோடியின் சொத்து மதிப்பு கூறப்பட்டுள்ளது.


பிரதமர் மோடியின் அமைச்சரவையில் உள்ள 29 அமைச்சர்களில் தர்மேந்திர பிரதான், ஜோதிராதித்ய சிந்தியா, ஆர்.கே. சிங், ஹர்தீப் சிங் பூரி, புருஷோத்தம் ரூபலா, கிஷண் ரெட்டி ஆகியோரும் தங்களுடைய சொத்துப் பட்டியலை வெளியிட்டுள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியும் தன் சொத்து பட்டியலை வெளியிட்டு உள்ளார்.


Source - Dinamalar

Similar News