நடிகர் ரஜினிக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து.!
நடிகர் ரஜினிக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து.!
நடிகர் ரஜினிகாந்த் இன்று 71வது பிறந்த நாள் விழாவை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையை தொடர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பல சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் இன்று காலை முதலே அவருக்கு சமூக வலைதளங்கள் மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அரசியல் கட்சி தொடங்கும் நாளில் பிறந்த நாள் கொண்டாடுவதால் அவரது ரசிகர்கள் இன்னும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம் செய்வதற்கு பல்வேறு மாவட்டங்களில் ரசிகர் மன்றங்கள் ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.