தொழில்துறை சங்கங்களிடம் இருந்து பெறப்பட்ட தரவின்படி, இந்தியாவில் மின்னணுப் பொருட்களின் உற்பத்தி 2021-2022-ல் 640,810 கோடியாக, அதாவது 80 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
கடந்த மூன்று வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட மூலதனப்பொருட்கள், உற்பத்தி முடிவடைந்த மின்னணுப் பொருட்கள் மற்றும் மின்னணு உபகரணங்களின் உற்பத்தி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் மின்னணுப் பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக மின்னணுப் பொருட்களில், உற்பத்தி முழுமையாக நிறைவடைந்த மின்னணுப் பொருட்களின் இறக்குமதி சதவீதம் 2019-2020-ல் 69 சதவீதமாக இருந்த நிலையில் 2021-2022-ல் 64 சதவீதமாக குறைந்துள்ளது.
மின்னணு உபகரணங்களின் இறக்குமதி 2019-2020-ல் 30 சதவீதமாக இருந்த நிலையில் 2021-2022-ல் 35 சதவீதமாக அதிகரித்தது, உள்நாட்டு மின்னணு உற்பத்தி அதிகரிப்பை எடுத்துக்காட்டுகிறது.
இத்தகவலை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.
Input From: PIB