இன்று விண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி., சி50 ராக்கெட்.!
இன்று விண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி., சி50 ராக்கெட்.!
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான (இஸ்ரோ) பூமியில் நடைபெறும் நிகழ்வுகளை கண்காணிப்பதற்காக 1,410 கிலோ எடை கொண்ட சி.எம்.எஸ்.01 என்ற செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு தளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் இன்று (17.12.2020) மாலை வானிலையை பொறுத்து விண்ணில் ஏவப்படுகிறது.
ராக்கெட் 44.4 மீட்டர் உயரம் கொண்டது. இதற்கான இறுதிக்கட்ட பணியான 25 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று பகல் 2.41 மணிக்கு தொடங்கியுள்ளது.
தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 25 மணிநேர கவுண்ட்டவுனை முடிந்து திட்டமிட்டபடி இன்று மாலை 3.41 மணியளவில் ராக்கெட் விண்ணில் பாய்கிறது.