புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த கணவர்.. எதிரிகளை பலி வாங்க ராணுவத்தில் இணைந்த மனைவி.!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரப்பிய வாகனத்தை மோத செய்தான். இதில் 40 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Update: 2021-05-29 11:32 GMT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரப்பிய வாகனத்தை மோத செய்தான். இதில் 40 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் நாட்டில் உள்ள பாலகோட் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி அழித்தது.


 



இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் மேஜர் விபூதி சங்கர் தவுந்தியாலின் மனைவி நிகிதா சவுல், நாட்டுக்காக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ராணுவத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இதனிடையே பயிற்சி முடித்த ராணுவ வீரர்கள், ராணுவத்தில் இணைகின்ற நிகழ்ச்சியில், நிகிதா கவுல் ராணுவ உடையுடன் சென்று ராணுவ வடக்கு கமாண்டர் ஜெனரல் ஒய்.கே.ஜோஷியிடம் நட்சத்திரத்தை அணிந்து கொண்டு தன்னை முறைப்படி இந்திய ராணுவத்தில் இணைத்துக்கொண்டார்.


 



அவருக்கு திருமணமாகி 9 மாதங்களிலேயே தனது கணவரை இழந்தார். இந்திய ராணுவத்தின் உயிர்களை பறித்த பயங்கரவாதிகளை அழிக்க வேண்டும் என்ற முயற்சியில் ராணுவத்தில் இணைத்துக்கொண்டார் எனக்கூறினார்.

Similar News