பஞ்சாப்: ஸ்ரீ ராம் பக்த சேனாவின் தேசிய தலைவரைத் தாக்கிய குற்றவாளிகள் 8 பேர் கைது.!

பஞ்சாப்: ஸ்ரீ ராம் பக்த சேனாவின் தேசிய தலைவரைத் தாக்கிய குற்றவாளிகள் 8 பேர் கைது.!

Update: 2020-12-05 17:30 GMT
டிசம்பர் 2 ஆம் தேதி பஞ்சாபில் இந்து அமைப்பான ஸ்ரீ ராம் பக்த சேனாவின் தேசிய தலைவர் தர்மேந்திரா மிஸ்ரா பைக்கில் வந்தவர்களால் தாக்கப்பட்டார். இவர் மீது தாக்குதல் நடத்திய எட்டு குற்றவாளிகளைப் பஞ்சாப் காவல்துறை வெள்ளிக்கிழமை அன்று கைது செய்துள்ளது. 

இந்த தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி சொத்து வியாபாரி குர்பிரீத் சிங் கும்மான் இன்னும் தலைமறைவாக உள்ளார். கைது செய்யப்பட்ட எட்டு நபர்களிடம் இருந்து கூர்மையான ஆயுதங்கள் மற்றும் மூன்று பைக்குக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இவர்கள் எட்டு பேர் மீதும் IPC சட்டம் 323, 324, 427, 326, 148, 149, மற்றும் 120-B கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு குறித்துப் பேசிய காவல் ஆணையர் குர்பிரீத் சிங் புல்லர், மிஸ்ரா மற்றும் கும்மான் இருவருக்கும் மிஸ்ரா அலுவலகத்தில் வைத்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னும் கும்மான் பழிவாங்கத் திட்டம் தீட்டியுள்ளார் என்று தெரிவித்துள்ளார். மேலும் குற்றவாளிகள் எட்டு பேரையும் CCTV காட்சிகள் மூலம் கைது செய்ததாகவும் புல்லர் தெரிவித்தார். விரைவில் கும்மானும் கைது செய்யப்படுவார் என்று காவல் ஆணையர் உறுதியளித்தார். 

 இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த பஞ்சாப் இந்துஸ்தான் சிவ சேனா தலைவர் கபில் பரத்வாஜ்,   தேச தலைவர்கள் இந்து தலைவர்களைக் குறிவைக்கின்றனர். மாநிலத்தில் இந்து தலைவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி பஞ்சாப் காவல்துறை மற்றும் அரசாங்கத்தை வலியுறுத்தி உள்ளார். 

Similar News