விமான மீது இருக்கும் ஆர்வம்: விமான வடிவமைப்பு குறித்து மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் விவசாயி!
விமானம் மீது இருக்கும் ஆர்வம் காரணமாக தன்னுடைய நிலத்தில் சிறிய விமான மாதிரிகளை உருவாக்கி அதை வடிவம் செய்வது குறித்து விவசாயி மாணவர்களுக்கு பாடம் எடுக்கிறார்.;
பஞ்சாப் மாநிலத்தில் விவசாயி ஒருவர் தன்னுடைய நிலத்தில் சிறியதாக விமான மாதிரிகளை உருவாக்கி, அவற்றை எப்படி வடிவமைப்பது? என்பது குறித்து மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார். பஞ்சாபின் முதல்வர் பகவத் சிங் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று இருக்கிறது. இங்குள்ள பதிந்தா மாவட்டம் சீர்வாலா கிராமத்தைச் சேர்ந்தவர் பத்ம சிங். இவர் விவசாயி பட்டப்படிப்பு முடித்த பின் கிராமத்தில் தற்பொழுது விவசாயம் பார்த்து வருகிறார். விமானங்கள் தொடர்பான ஆர்வத்தினால் தன் நிலத்தில் இவர் தர்மாகோலில் சிறிய விமானங்களை வடிவமைக்க தொடங்கினார்.
தற்பொழுது சில கல்லூரிகளில் விமான வடிவமைப்பு தொடர்பான பாடங்களை எடுத்து வருகிறார். இதைப்பற்றி அவர் கூறுகையில், சிறுவயதில் இருந்தே பறவைகள் போல பறக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. பட்டப்படிப்பு முடித்த பின் குடும்பத்தின் விவசாய நிலத்தில் விவசாயத்தை பார்த்து வருகிறேன். எனக்கு 2020 ஆண்டு ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு ஒரு திருமண விழாவிற்கு சென்றிருந்தேன். அப்போது அங்கிருந்து இரண்டு சிறிய விமான மாடல்கள் மீது ஆர்வம் ஏற்பட்டது.
அவற்றை விலைக்கு வாங்கி வந்தேன். இந்நிலத்தில் இந்த விமானங்களை இயக்குவதற்கு ஓடுபாதையும் அமைத்துள்ளேன். அதன் பின் விமான வடிவமைப்பு தொடர்பான இணையத்தில் பார்த்து தெரிந்து கொண்டேன். புதுடெல்லி உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் சிறப்பு பட்டப்படிப்பை என்னுடைய தனிப்பட்ட முயற்சியின் பெயரில் தொடர்ந்து படித்து வருகிறேன். தற்போது நான் மூன்று கல்லூரிகளில் விமான வடிவமைப்பு தொடர்பான பாடங்களை எடுத்து வருகிறேன், என்னை பார்த்து என் மகனுக்கும் இதில் ஆர்வம் ஏற்பட்டு இருக்கிறது. அவன் தற்பொழுது ஏரோநோட்டுகள் இன்ஜினியராக உள்ளார் என்று கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: Dinamalar News