கொரோனா அதிகரிப்பு: பஞ்சாப்பில் இரவு நேர ஊரடங்கு அமல்.!
கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவத்தொடங்கியது. இதன் பின்னர் படிப்படியாக தொற்று அதிகரிக்க தொடங்கியது. இதன் பின்னர் மத்திய அரசு எடுத்த நடவடிக்கையால் தொற்றின் தீவிரம் சற்று குறைந்திருந்தது.

இதனால் நாடு முழுவதும் ஒரு சில மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் தொற்றின் தீவிரம் குறைந்து காணப்பட்ட நிலையில், தடுப்பூசி போடும் பணியானது துவங்கப்பட்டது.
இந்நிலையில், கோடை கால தொடங்கிய நிலையில் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் மகாராஷ்டிரா மாநிலங்களில் குறிப்பிட்ட நகரங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதே போன்று பஞ்சாப் மாநிலங்களிலும் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் அம்மாநில அரசு தொற்று தடுக்கும் வகையில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
பஞ்சாப்பின் முக்கிய நகரங்களில் இரவு 9 மணியில் இருந்து காலை 5 மணிவரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் தெரிவித்து உள்ளார்.