மருந்து கவர்களையும் ஸ்கேன் செய்யலாமா? போலிகளை வேரோடு அகற்ற மத்திய அரசு கொண்டு வரப்போகும் அசத்தல் திட்டம்!

Update: 2022-10-06 08:36 GMT

அதிகம் விற்பனையாகும், முக்கியமான மருந்துகளில் 'டிராக் அண்டு டிரேஸ்' என்ற புதிய தொழில்நுட்பட்தை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. போலி மற்றும் தரமற்றவற்றை தடுக்க இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது.

முதல்கட்டமாக 300 மருந்துகளின் லேபிள்கள் மீது பார்கோடு அல்லது க்யூஆர் கோடு பிரிண்ட் செய்யப்படவுள்ளது. நோய் எதிர்ப்பு மருந்துகள், இதய நோய், வலி நிவாரணி மாத்திரை, அலர்ஜிக்கான மாத்திரை அட்டையின் விலை ரூ.100-க்கு மேல் இருக்கும் மருந்துகளுக்கு இந்த வசதி அறிமுகமாகவுள்ளது.

இந்த திட்டத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. க்யூஆர் கோடை ஸ்கேன் செய்தால் மருந்தின் தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி, விலை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம்பெறும்.

இதன் மூலம், போலி, தரமற்ற, காலாவதியான மருந்துகளை தடுக்க முடியும். அதேநேரம் இந்த கூடுதல் வசதியை செய்வதால் மருந்து நிறுவனங்கள் விலையை 3 முதல் 4 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Input From: Business Standard

Similar News