ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்.!
ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் ஜெகநாத் பஹாடியா கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் ஜெகநாத் பஹாடியா கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். கடந்த 1980ம் ஆண்டில் ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர் ஜெகநாத் பஹாடியா 89, இவர் பீகார், அரியானா மாநிலங்களில் ஆளுநராகவும் பணியாற்றி வந்துள்ளார்.
இதனிடையே ஜெகநாத் பஹாடியாவுக்கு கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.