அதிகரிக்கும் கொரோனா தொற்று.. ராஜஸ்தான் மாநிலத்தில் முழு ஊரடங்கு அறிவிப்பு.!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை தீவிரம் அடைந்துள்ள நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

Update: 2021-05-07 07:12 GMT

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை தீவிரம் அடைந்துள்ள நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக வருகின்ற மே 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தை பொறுத்தவரையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17 ஆயிரத்து 532 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அம்மாநிலத்தில் மொத்த பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியுள்ளது.


 



மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,182 ஆக உயர்ந்துள்ளது. தொற்று அதிகரித்து வரும் நிலையில், ராஜஸ்தானில் வரும் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Similar News