மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கொரோனா தொற்று உறுதி.!

கடந்த ஆண்டை போன்று மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இருந்தபோதிலும் தடுப்பூசி போடும் பணியானது மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

Update: 2021-04-21 11:20 GMT

மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று 2வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் தினந்தோறும் வைரஸ் பாதிக்கப்படுபவரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டை போன்று மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இருந்தபோதிலும் தடுப்பூசி போடும் பணியானது மிக வேகமாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.




 


அந்த வகையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி கூறியுள்ளார்.

Similar News