தீவிரவாதத்தை கைவிட்டு உழைக்க தயாரான காஷ்மீர் இளைஞர்கள் - அக்னி பாதை திட்டத்தில் சேர குவிந்தனர்!

Update: 2022-10-10 06:18 GMT

அக்னிவீரர்களுக்கான இந்திய ராணுவ ஆள்சேர்ப்பு பேரணி ஜம்முவின் சம்பா மாவட்டத்தில் தொடங்கியது.

பேரணியில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். அதில் பங்கேற்ற ரோஹித் சிங் கூறுகையில், "நன்றாக தயார் செய்தவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நான் நாட்டுக்கு சேவை செய்ய விரும்புகிறேன், எனவே ராணுவத்தை தேர்வு செய்கிறேன்" என்றார்.

 முப்படைகளுக்கு 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னி பாத் திட்டத்தை மத்திய அரசு கடந்த ஜூன் 14-ம் தேதி அறிவித்தது.

இதில் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்கள் ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். மாதந்தோறும் ஊதியம் வழங்கப்படும். அதில் சிறிய தொகை மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும். நான்கு ஆண்டு பணி முடித்த பிறகு, அவர்களுக்கு ரூ.12 லட்சம் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும்.

காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) வழியாக உரி உட்பிரிவின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள கிராமங்களில் வசிக்கும் இளைஞர்களுக்கு அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்வதற்காக முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. 

இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிந்தனர். இதில் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்களுக்கு எல்லை கட்டுப்பாட்டு கோட்டருகே உள்ள அவரவர் கிராமங்களிலேயே 2 மாத பயிற்சிக்கு ராணுவம் ஏற்பாடு செய்துள்ளது. 

Input From: Risingkashmir

Similar News