கொரோனா வைரஸை விட சாலை விபத்தால் உயிரிழப்பு அதிகம்.. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.!

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும், 1.5 லட்சம் பேர் சாலை விபத்துகளால் உயிரிழந்து வருகின்றனர். இது கொரோனா வைரஸ் தொற்றை விட அதிகம் என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Update: 2021-07-06 09:13 GMT

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும், 1.5 லட்சம் பேர் சாலை விபத்துகளால் உயிரிழந்து வருகின்றனர். இது கொரோனா வைரஸ் தொற்றை விட அதிகம் என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

வாகன விபத்து மற்றும் பாதுகாப்பு பற்றிய காணொலி கருத்தரங்கத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்து பேசியதாவது: இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஏராளமான சாலை விபத்துக்கள் நடைபெறுகிறது.

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் சுமார் 1.5 லட்சம் பேர் சாலை விபத்துகளால் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது. இது கொரோனா வைரஸ் தொற்று உயிரிழப்புகளை விட அதிகம். சாலை விபத்தால் ஏற்படுகின்ற உயிரிழப்புகளை 50 சதவீதம் குறைக்க வேண்டும். 2030ம் வருடத்திற்குள் எவ்வித விபத்து மற்றும் உயிரிழப்புகளும் ஏற்படாத நிலையை உருவாக்க வேண்டும் என்பதுதான் எனது தொலை நோக்காக உள்ளது.

இதில் சாலை விபத்துகளில் 60 சதவீத உயிரிழப்புகள் இரண்டு சக்கரத்தில் செல்பவர்கள்தான். மோட்டார் சைக்கிள் போக்குவரத்து பாதுகாப்புதான் இப்போதைய தேவையாக உள்ளது. வாகன ஓட்டிகளுக்கு முறையான பயிற்சி மற்றும் அதற்கு ஏற்ற சாலை வசதிகள் மேம்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Similar News