தினமும் பாஸ்டேக்கில் ரூ.70 கோடி வசூல்.. NH தகவல்.!
தினமும் பாஸ்டேக்கில் ரூ.70 கோடி வசூல்.. NH தகவல்.!
நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடிகளில் பாஸ்டேக் மூலம் தினமும் 75 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் செய்யப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது பற்றி தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஸ்டேக்குகளின் பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக, மின்னணு கட்டண வசூல் முறை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இதில் தினசரி வசூல் 92 கோடி ரூபாயில் தற்போது 80 விழுக்காடான 70 கோடி ரூபாய் வரை வசூலாவதாகவும் நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. அடுத்த வருடம் ஜனவரி 1ம் தேதியில் இருந்து அனைத்து 4 சக்கர வாகனங்களுக்கும் பாஸ்டேக் முறை கட்டாயம் என கூறியுள்ளது. ஒரு சில வாகன ஓட்டிகள் பாஸ்ட்டேக் முறையை நீக்க வேண்டும் என்று கூறி வருகினறனர் என்பது குறிப்பிடத்தக்கது.